ETV Bharat / bharat

மருந்துப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடும் அது ஏற்படுத்தும் விளைவுகளும்...

author img

By

Published : Dec 5, 2019, 12:53 PM IST

ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், நோய்களுக்கு சிகிச்சை பெறுவதிலும் ஏழைகளுக்கு உள்ள அடிப்படை உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு மருத்துவத் துறையை சீர்படுத்திவிட்டால், ஆரோக்கியமான தேசத்தை சாத்தியப்படுத்திவிடலாம்.

Medicine
Medicine

சிறிய நோய்கள் முதல் நாள்பட்ட நோய்கள் வரை பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி இருக்கும் நாட்டு மக்களுக்கு ஓர் இனிமையான செய்தி!

மருத்துவச் சந்தையில் மருந்துப் பொருட்களின் விலை 80 விழுக்காடு வரை குறையப் போகிறது. மருந்துப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி சொல்வோம். இந்தியாவில் விற்கப்படும் மருந்துப் பொருட்களின் தரம், விலை உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர் துறை உள்ள போதிலும், சுமார் 10 ஆயிரம் வகைப்படுத்தப்படாத மருந்துப் பொருட்கள், இந்தத் துறையின் கீழ் வருவதில்லை. வைட்டமின் மாத்திரைகள் முதல் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வரை பல்வேறு மருந்துப் பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

மருந்துப் பொருட்கள் மீதான லாபம் 30 விழுக்காட்டிற்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் முன்மொழிவை, மருந்துப் பொருட்களின் தயாரிப்பாளர்களும், விநியோகிஸ்தர்களும் ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த மருந்துகளில் விற்பனையாளர்கள் சுமார் 30% லாபம் ஈட்டுகின்றனர். விலை உயர்ந்த மருந்துப் பொருட்கள் மீதான தேசிய மருந்து விலை ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, மாற்று மருந்துகளின் தேவை இயற்கையாகவே அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை, மத்திய அரசு, தேசிய மருந்து விலை ஆணையம் ஆகியவற்றின் பல மாதகால கூட்டு முயற்சியின் காரணமாகவே பொது மருந்துகளின் லாபத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க முடிந்துள்ளது. அரிதான நோய்களுக்கான காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டுமானால், முதல் 5 ஆண்டுகளுக்கு அந்த மருந்து தேசிய மருந்து விலை ஆணைய வரம்பின்கீழ் இருக்க வேண்டும் என்று மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டபோது, அதற்கு எதிர்ப்பு எழுந்தது. காப்புரிமை பெற்ற மருந்துகளை தேசிய மருந்து விலை ஆணைய வரம்பின்கீழ் கொண்டு வருவது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டது.

இழப்பை மத்திய அரசு ஈடுகட்டுமானால், அனைத்து வகை மருந்துப் பொருட்களின் விலையையும் குறைக்க மருந்து தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். இதன்மூலம், நுகர்வோர் பயனடைய முடியும். இன்றைய காலகட்டத்தில் உயிர் காக்கும் மருந்துகளில்கூட கலப்படம் உள்ளது. மலேரியா, நிமோனியா நோய்களுக்கான மருந்துகளில் காணப்படும் கலப்படம் காரணமாக உலக அளவில் ஆண்டுதோறும் 25 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கிறார்கள். 2008இல் உலகில் 75 நாடுகளில் 29 கலப்பட மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் கலப்பட மருந்துகளின் எண்ணிக்கை 95 ஆகவும், பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 113 ஆகவும் அதிகரித்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இத்தகைய கலப்பட மருந்துகள் இந்தியாவிலும் சீனாவிலும் அதிகம் தயாரிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் கலப்பட மருந்துகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. கலப்பட மருந்துகள் அதிகம் காணப்படும் இடங்களில் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதும் அதிகரிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 11% தரச்சோதனையில் தோல்வி அடைந்துள்ளன. கலப்பட மருந்துப் பொருட்களைக் கொண்டு இந்தியாவில் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு சட்டவிரோத வர்த்தகம் நடைபெற்று வருவதாக 4 ஆண்டுகளுக்கு முன்பே அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்தது.

மருத்துவத் துறையில் நாட்டின் கெளரவம் காப்பாற்றப்பட வேண்டுமானால், திட்டமிட்ட ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று மஷேல்கர் கமிட்டி ஏற்கெனவே விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. உடனடி நடவடிக்கை இல்லாததன் காரணமாக சட்டவிரோத மற்றும் சமூக விரோத சக்திகள், இந்தத் துறையில் வளர்ந்துவிட்டார்கள். கலப்பட மருந்துகளை கட்டுப்படுத்துவதில் பிளாக் – செயின் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக ஓரளவு உதவிக் கொண்டிருக்கிறது. கலப்பட மருந்துப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இனியும் தாமதம் இருக்கக் கூடாது.

இந்திய மருந்து தயாரிப்பு தொழிலை சீர்படுத்தவும், நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதற்கேற்ப உடனடியாக தேசிய அளவில் கொள்கைகள் வகுக்கப்பட்டு அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் நோய்களைக் குணப்படுத்த முடியும். பொதுமருந்துகள் பிரபலமாக இருந்திருந்தால், ஏழை நோயாளிகள் அதிகம் பயனடைந்திருப்பார்கள். குறைவான விலையில் மருந்துப் பொருட்களை விற்பதில் மலிவு விலை மருந்தகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலிவு விலை மருந்தகங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. எனினும், இவ்விஷயத்தில் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும் உண்மை நிலவரத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

அமெரிக்காவில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மருத்துவர்கள் பொது மருந்துகளையே பரிந்துரைக்கின்றனர். இங்கிலாந்தில் இந்த விழுக்காடு இன்னும் அதிகம். மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சர்வதேச அளவில் பொது மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. சுமார் 30% மருந்துகளை அமெரிக்காவிற்கும், 19% மருந்துகளை ஆப்பிரிக்காவிற்கும், 16% மருந்துகளை ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யா, நைஜீரியா, பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும்கூட இந்தியாவில் இருந்து மருந்துகள் ஏற்றுமதியாகின்றன. உள்நாட்டில் பொதுமருந்துகளை பயன்படுத்துவதில் காணப்படும் விழிப்புணர்வின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தரமான மருந்துப் பொருட்களை பயன்படுத்தும் விவகாரத்தில் வெளிப்படையாகவே மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதுதான் மருந்து நிறுவனங்கள், வணிகர்கள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் ஆகியோர் தவறான முறையில் பலனடையக் காரணமாக இருக்கிறது.

தலைநகர் டில்லியில் உள்ள 4 மிகப்பெரிய மருத்துவமனைகள், அதிக விலை இல்லாத மருந்துகள் மீது 160% முதல் 1,200% வரையும், விலை நிர்ணய வரம்புக்குள் வராத மருந்துகள் மீது 115% முதல் 360% வரையும் லாபம் பார்த்ததை தேசிய மருந்து விலை ஆணையம் அம்பலப்படுத்தியது. நோயாளிகளிடம் கொள்ளை அடிப்பது இப்படித்தான் பல தலைமுறைகளாக நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால், பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. எந்த நாட்டில் நோயாளியின் சிகிச்சை செலவில் 70% மருந்துகளை வாங்குவதற்கே போகிறதோ, அங்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிடுகிறது. பொது மருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்; ஒரு மருந்துப் பொருள் அதிக விலைக்கு விற்கப்படுமானால் அதனைக் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்; கலப்பட மருந்துகளை ஒழிக்க வேண்டும். அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

மருந்துகடை
மருந்துகடை
ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவதிலும் ஏழைகளுக்கு உள்ள அடிப்படை உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டு மருத்துவத் துறையை சீர்படுத்திவிட்டால், ஆரோக்கியமான தேசத்தை சாத்தியப்படுத்திவிடலாம்.

இதையும் படிங்க:

‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயார்’ - அமைச்சர் பாண்டியராஜன்!

Intro:Body:

The perfect medicine for disorder

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.