காற்று மாசுபாட்டின் தீவிரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து, நாட்டின் தலைநகரான டெல்லியை முன்எப்போதும் இல்லாத அளவிற்கு வருத்தத்தில் மூழ்கச் செய்தது. "டெல்லியை விட நரகம் எவ்வளவோ மேல்" என்று நீதிமன்றம் கடுமையான கருத்தை வெளிப்படுத்தி, அரசை வறுத்தெடுத்தது.
விவசாய கழிவுகளை முறையாக அகற்ற விருப்பமோ, அது எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கையோ இல்லை என்று பஞ்சாப், ஹரியானா தலைமைச் செயலாளர்களை நீதிமன்றம் கண்டித்தது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று, நீர் மாசுபாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "மாசுபாட்டின் காரணமாக மக்கள் இறக்கவேண்டுமா?" என கேள்வி எழுப்பியது. இது பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை பிரதிபலிக்கிறது.
காற்று மாசுவை கருத்தில் கொண்டு தலைநகரில் மருத்துவ அவசர நிலையை அறிவித்த கேஜ்ரிவால் அரசு, அனைத்து கட்டுமான, இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. ஹிரியானா அரசும் தன் பங்கிற்கு, பயிர் கழிவுகள் அதிகம் எரிக்கப்படும் கிராமங்களை அடையாளம் கண்டு, விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வாடைக்கு வழங்கியுள்ளது. அறுவடைக்கு பின் பயிர்க்கழிவுகளை உழுவதால் பலலட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பாதுகாக்கலாம் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தோற்றுவிட்டன.
மாசுகாட்டுபாடு குறித்து டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை சந்தித்தன. இனியாவது, பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருள்களை பயன்படுதவன் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அதில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமான பயிர்க்கழிவு எரிப்பை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது. ஆனால் இதுகுறித்து உரிய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஞ்சாப், ஹரியானா அரசுகள், பயிர்க்கழிவுகளை வயல்களில் எரிக்கத் தடை விதிப்பதாக அறிவித்தாலும், உண்மையில் விவசாயிகள் அதனைத் தொடர்ந்து செய்த வண்ணமே உள்ளனர்.
ஏனெனில், இயந்திரங்கள் மூலம் டன் கணக்கில் வைக்கோல், பயிர் எச்சங்களை அகற்றுவதென்பது அவற்றின் திறனுக்கு அப்பாற்பட்டதாகும். சுற்றுச்சூழலும், தேசமும் பாதிப்படைவதை தடுக்க வேண்டுமெனில், முதல் கட்டமாக அதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். நாட்டில் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன - இதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு பாதிக்கும் மேலானது. எனவே, துரித நடவடிக்கைகள் இங்கிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.
டெல்லியைக் காட்டிலும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தானில் காற்று மாசுபாடு தொடர்பான இறப்புகள் அதிகம். ஹரியானா, பாக்பத், காஸியாபாத், ஹப்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கான்பூர், சிர்சா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு டெல்லியை விட மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியங்களின் திறமையின்மையும், அங்கு நடக்கும் ஊழலையுமே இது பிரதிபலிக்கிறது.
நுரைப் பஞ்சுகளாய் காட்சியளிக்கும் பட்டினப்பாக்கம் கடற்கரை!
மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூன்று மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு (CPCB), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த காலக்கெடு, கடந்த அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. விதிமீறல்கள், செயலின்மை ஆகியவையால் டெல்லி போன்று மேலும் பல நகரங்கள் உருவாகக்கூடும்.
நீர், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தாவிட்டால், ஆசிய-பசிபிக் பகுதி காலநிலை மாற்ற ஆபத்தை எதிர்கொள்ளும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி 25 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தது. இத்தகைய அறிவுரைகளை அவமதித்ததே, தற்போதைய சிக்கல்களுக்கு காரணம். காற்று மாசுபாட்டால் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி எட்டில் ஒருவர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர்.
உலகளவில் 10 லட்சம் இறப்புகளில் சராசரியாக 64 பேர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் இந்த எண்ணிக்கை 134-ஆக உள்ளது. சிறப்புத்தூய்மை திட்டத்திற்காக 102 நகரங்கள் அடையாளம் கண்டுள்ளதாக தேசிய தூய்மை காற்றுத் திட்டம் ( The National Clean Air Plan - NKAP) கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
தலை விரித்தாடும் காற்று மாசு - சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை!
மத்திய - மாநில அரசுகளின் துறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், மாசுபாட்டுக்கு எதிரான போராட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மூசி நதி மாசுபடுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தும், டெல்லி மாசு நெருக்கடி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும், சூழ்நிலை மீதான ஈர்ப்பு, காற்று, நீர் மாசுபாட்டின் எதிர்கால தேசிய அளவிலான நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.
காற்று மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், வானகங்களுக்கு எதிராக கடும் விதிகள் அமல்படுவதன் மூலம், அண்டை நாடான சீனா இப்பிரச்னையை பெருளவில் தீர்த்துவிட்டது. தூய்மையை தங்களது கலாசாரமாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடுகள், உலகளாவிய வானிலை பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.
கோபன்ஹேகன் மாநாடு மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதேவேளையில், சாம்பி (இந்தோனேசியா) போன்ற நகரங்கள், தாவர வளர்ச்சிக்கும், கழிவுகளில் இருந்து மீத்தேன் உற்பத்திக்கும் அழுத்தம் தருகின்றன. கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பத்தின் உதவி, மிக முக்கியமாக வருங்கால சந்ததியினரின் நலனுக்காக தூய்மையான சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்றவை இந்த பூமியை வாழ்வதற்கு உகந்த சிறந்த இடமாக மாற்றும்.