ராணுவ கண்காணிப்பிற்காகத் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் நவம்பர் 25ஆம் தேதி காலை 9:28 மணிக்கு விண்ணில் செலுத்தப்போவதாக இஸ்ரோ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் தேதியை இஸ்ரோ மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, கார்டோசாட்-3 என்ற இந்திய செயற்கைக் கோளையும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக் கோளையும் தாங்கிய பிஎஸ்எல்வி ராக்கெட்டை வரும் 27ஆம் தேதி காலை 9:28 மணிக்கு விண்ணில் செலுத்துவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக கண்டறியும் பிஎஸ்எல்வி சி-47 வரும் 25ஆம் தேதி ஏவப்படும்!