நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்பிள், துரியன், மங்குஸ்தான் உட்பட பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. பழ சீசன் தொடங்கியதும், தோட்டக்கலைத் துறையின் கீழ் பேரி, ஆப்பிள் உட்பட பல்வேறு பழங்களை கொண்டு ஜாம், ஊறுகாய் உட்பட பல்வேறு பொருட்கள் இங்கு தயாரிக்கப்படும். தற்போது பேரிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால் 600 கிலோ பேரியை கொண்டு ஜாம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னும், ஓரிரு நாட்களில் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்துவிடும். பின்னர் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் விற்கப்படும். ஜாம் பாட்டில் 300 கிராம் - 90 ரூபாய், 500 கிராம்- 110 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.