புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிரதேச செயலர் ராஜாங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அனிபால்கென்னடி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணபிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சோ. பாலசுப்ரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தேவபொழிலன், புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் சிவ. வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்