1789ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி ஃபிரான்ஸ் நாட்டிலிருந்த மன்னராட்சியை, பாரிஸ் நகரில் உள்ள பஸ்தி சிறைச்சாலை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்குக் கொண்டுவந்து மக்களாட்சியை நிறுவினர். இந்தத் தினம் ஃபிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.
இத்தினத்தை நினைவுகூரும் வகையில் ஃபிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13ஆம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். கரோனா காரணமாக புதுச்சேரியில் நேற்று இரவு நடைபெற இருந்த மின்விளக்கு ஊர்வலம் ரத்துசெய்யப்பட்டது. இருப்பினும், இன்று கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஃபிரான்ஸ் துணை தூதர் காத்ரின் ஸ்வாட், மாவட்ட ஆட்சியர் ஆருண் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
கரோனா காரணமாக இந்நிகழ்வில் வேறு யாரும் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் இந்திய, ஃபிரான்ஸ் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு கடற்கரைச் சாலையில் வானவேடிக்கை, கலைநிகழ்ச்சிகளுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளன.