ETV Bharat / bharat

மா.கம்யூ கட்சியின் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு! - ஏன் தெரியுமா?

author img

By

Published : Sep 26, 2019, 2:13 PM IST

புதுச்சேரி: அக்டோபர் 10 முதல் 16வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி   செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதிலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்துவருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மா.கம்யூ கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகச் சொன்ன சீதாராம் யெச்சூரி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் ஏற்றுமதி குறைந்ததால் அதன்மூலம் கிடைத்த வருமானம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் பணம் உள்ளவர்கள்தாம் வசதி படைத்தவர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏழை ஏழையாகவே இருந்துவருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மத்திய நிதியை பொது விவகாரத்திற்கும் நாட்டின் உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 10 முதல் 16வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படவிருப்பதாகவும் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மா.கம்யூ மாவட்ட செயற்குழு உறுப்பினர் கைதை கண்டித்து போராட்டம்

Intro:மத்திய நிதியை பொது விவகாரத்திற்கும் நாட்டின் உள்கட்டமைப்பு அமைப்பிற்கும் பயன்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 10 முதல் 16 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என சீதாராம் எச்சூரி புதுச்சேரியில் பேட்டியளித்தார்

Body:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
மத்தியில் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதிலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருவதாகவும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றார்

மக்களிடம் பணம் இல்லாததால் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையவில்லை என சீதாராம் எச்சூரி குற்றம்சாட்டினர்

இந்தியாவில் ஏற்றுமதி குறைந்ததால் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் குறைந்துள்ளது பொருளாதாரம் சீரழிந்து வருகிறது இதனால் பணம் உள்ளவர்கள் தான் வசதி படைத்தவர்களாக உள்ளனர் ஏழை ஏழையாகவே இருந்து வருகின்றனர் ஏழைகளின் வாழ்வில் வளர்ச்சி ஏற்படவில்லை என சீதாராம் எச்சூரி செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து பேசிய அரசியல் குழு தலைவர் ஜி ராமகிருஷ்ணன்

புதுச்சேரி மாநிலம் உயர்கல்வி கேந்திரம் என்று புதுச்சேரி அரசு பிரகடனம் படுத்தியுள்ளது
புதுவையில் மத்திய அரசின் முழு நிதி உதவியோடு செயல்படக்கூடிய ஜிப்மர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த சூழ்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தனியார் கல்வி நிறுவனங்களில் லாபத்திற்காக புதுவையில் தனியார் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்காக கொள்கை முடிவு எடுத்த அரசாணை வெளியிடப்பட்டது இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக போராடி அடுத்து அந்த அரசு ஆணை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது

இப்பொழுது என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமான ஒரு தனியார் கல்விக் குழுமம் அந்த அரசாணையை செயல்படுத்திட வேண்டி பல வகையிலும் முயற்சி செய்துவருகிறது எனவே புதுவை ஆளும் காங்கிரஸ் அரசு தங்கள் சுயலாபத்திற்காக தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அரசாணையை அமுல் படுத்திட வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என்றார்

Conclusion:மத்திய நிதியை பொது விவகாரத்திற்கும் நாட்டின் உள்கட்டமைப்பு அமைப்பிற்கும் பயன்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 10 முதல் 16 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என சீதாராம் எச்சூரி புதுச்சேரியில் பேட்டியளித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.