ETV Bharat / bharat

வேல் யாத்திரை சென்றாலும் பாஜக வெற்றி பெற முடியாது - தா.பாண்டியன் - The BJP did not leave Rajaraja Chola either

புதுச்சேரி: பாஜக வேல் யாத்திரை சென்றாலும், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

communist
communist
author img

By

Published : Nov 2, 2020, 10:23 AM IST

புதுச்சேரி விடுதலை திருநாளை முன்னிட்டு நேற்று (நவ.1) ஹோட்டல் ஜெயராம் கருத்தரங்க கூடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், "புதுச்சேரி விடுதலை நாளில் கவர்னர் கிரண் பேடிக்கு டெல்லியில் பெரிய பதவி வழங்கி மோடி திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாஜகவினர் ராஜராஜ சோழன் முதல் யாரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. எல்லோரையும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

பாஜக யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் 'உன்னால் நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்' என இருவரும் தோற்றுத்தான் போவார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் கால்பதிக்கவே முடியாது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக உள்ளது. கூட்டணியில் எந்த குழப்பத்திற்கும் இடமில்லை. தமிழ்நாட்டில் வேல் யாத்திரை சென்றாலும், பாஜகவினால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது" என்று கூறினார்.

வேல் யாத்திரை சென்றாலும் பாஜக வெற்றி பெற முடியாது

இதையும் படிங்க: கோவையில் பிரபல ஜவுளி நிறுவனங்களுக்கு அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.