காசினோ எனும் சூதாட்ட மன்றத்தை புதுச்சேரிக்கு கொண்டு வர ஆளும் காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது என்றும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளிக்கப்பட்டுவருகிறது.
அந்தவகையில், புதுச்சேரி மாநில பாஜகவின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சுவாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் இன்று கிரண்பேடியை சந்தித்து சூதாட்ட மன்றம் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவாமிநாதன், காங்கிரஸ் கட்சி தேர்தல் செலவுக்கு பணம் சேர்ப்பதற்காக சூதாட்ட மன்றத்தை தொடங்க முயற்சிக்கிறது. சூதாட்ட மன்றம் புதுச்சேரிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
ஆன்மீக பூமியை சீரழிக்கக் கூடிய முதலமைச்சராக நாராயணசாமி உள்ளார். புதுச்சேரயில் ஐடி பார்க் திறக்க நடவடிக்கை இல்லை. இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் நடமாடும் இடமாக புதுச்சேரி உள்ளது. குடியால் குடும்பங்கள் சீரழிந்து, இளம் விதவைகள் அதிகம் உள்ளனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரைச் சந்தித்து முறையிட உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் - போக்குவரத்து மாற்றம்