ETV Bharat / bharat

தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!

author img

By

Published : Dec 4, 2019, 7:22 AM IST

Updated : Dec 6, 2019, 2:05 PM IST

கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத்தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது

Maha
Maha

தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், சமீபத்திய மகாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளைக் கூறலாம்.

அரசியலிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி எந்த நேரத்திலும் எதிர்பாராத நிகழ்வுகள் எதுவும் நடக்கலாம் என சில நாட்கள் முன்பு தான், மத்திய அமைச்சரான நிதின் கட்கரி திருவாய் மலர்ந்திருந்தார். அது மகாராஷ்டிரா அரசியலில், பதவியேற்ற 4 நாளில் பட்னாவிஸ் செய்த ராஜினாமாவின் மூலம் நிரூபணமாகிவிட்டது. எதிர்பாரா திருப்பமாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்தன. முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும் தேர்வு செய்து, ஒருமித்த முடிவுக்கு கடந்த 22-ந் தேதி இரவு 8 மணிக்கு வந்து விட்டன. ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு எல்லாமே தலைகீழ் மாற்றமாகி, ஒட்டு மொத்த இந்தியாவையே பரபரப்பாக்கி விட்டது. அடுத்தடுத்து என்ன அதிரடி செய்திகள் வரப் போகின்றனவோ? என அனைவரையும் டிவிமுன் கட்டிப்போட்டுவிட்டது பாஜகவின் பட்னாவிஸ் முதல்வரான சம்பவம். அந்த ஒரே நாள் நள்ளிரவில், ஆபரேசன் ஆகார்ஸ் என்ற பெயரில் பாஜக மேற்கொண்ட அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால், தேசியவாத காங்கிரசின் சட்டமன்ற குழுத்தலைவரான அஜித் பவார், பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறினார். அக்கட்சியின் 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில், இரவோடு இரவாக குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற நிகழ்வு அரங்கேறி விட்டது. ஆனால் பட்னாவிசை மீண்டும் முதல்வராக்க முடிந்த அஜித் பவாரால், எதிர்பார்த்தபடி தேசியவாத காங்கிரசில் எந்த பிளவும் ஏற்படுத்த முடியவில்லை. பிளவும் ஏற்படவில்லை. இதனால் பட்னாவிஸ் அரசுக்குத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதும் சந்தேகமாகி விட்டது.

அஜித் பவாருடன் தேவேந்திர பட்னாவிஸ்
அஜித் பவாருடன் தேவேந்திர பட்னாவிஸ்

இந்நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, வழங்கிய அதிரடி தீர்ப்பையடுத்து, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ய, நிலைமை தலைகீழாகியது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிப்பது இயலாது என உறுதியானதால்,வேறு வழியின்றி பட்னாவிசும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி பதவியேற்ற 4 நாட்களிலேயே பாஜக பின் வாங்கி, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க வழிவிட்டது. தங்களுக்குள் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி, தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் நிலையான ஆட்சியைத் தரமுடியுமா? என்பது தான் இப்போதைய கேள்வி.

சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார்

இதற்கு முன்னர் 1996-ல் மத்தியில் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக இருந்த போதும், மெஜாரிட்டிக்கு எதிர்க்கட்சிகளின் தயவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது வாஜ்பாயோ, எதிர்க்கட்சிகளை உடைத்து தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால், அப்படி இந்தப் பதவியே தேவையில்லை என்று கூறிவிட்டதும் நடந்தது. அப்படி கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது.மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 21-ல் நடந்த தேர்தலில், பாஜக கூட்டணியில் 25.6 சத வாக்குகளைப் பெற்று 56 இடங்களில் வென்றது சிவசேனா. பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்கத் தேவையான இடங்களுக்கும் கூடுதலாகவே பலம் இருந்தும், முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரப்பகிர்வில் சிவசேனா முரண்டு பிடித்ததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் காங்கிரஸ் முதலில் தயங்கினாலும், ஒரு வழியாக தயவு காட்ட, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - கூட்டணி அரசு ஆட்சியமைந்து, சிவசேனாவுக்கு முதல்வர் பதவியும் கிடைத்துவிட்டது.

இப்போதோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஊழலில் ஊறிப்போன கட்சி என பாஜக விமர்சிக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன் அதே கட்சியின் அஜீத்பவாருடன் கைகோர்த்து, அவருடைய ஆதரவாளர்களையும் கவர, அஜீத் பவாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கியது. இது போன்றுதான் பதவி, அதிகாரத்திற்காக மணிப்பூர் முதல் கோவா வரை கொள்கை முரண்பாடான கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானது. தனக்கென தனிப்பட்ட சித்தாந்தங்கள், கொள்கைகளை கொண்ட தலைவர்களையும் , தொண்டர்களையும் கொண்ட கட்சி என அறியப்படும் பாஜக, பதவி, அதிகாரத்திற்காக, முதலில் கர்நாடகாவிலும், இப்போது மகாராஷ்டிராவிலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்பது தான் தெரியவில்லை.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் இப்போது அமைந்துள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணியை 3 சக்கரங்கள் கொண்ட ஆட்டோ என்றும், அதன் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு திசையில் பயணிப்பதாகவும், முதல்வர் பதவி இழந்த பட்னாவிஸ் விமர்சித்துள்ளார். இதனால், இந்த 3 கட்சிகளின் கோமாளித் தனங்களால் எந்த நேரமும் ஆட்சி என்ற ஆட்டோ கவிழும் என்றும் பட்னாவிஸ் கூறியுள்ளார். பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த போது, பதவிக்காகவும், மெஜாரிட்டிக்காகவும் குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை இழுப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறினார். ஆனால், முன்னதாக அஜித் பவாரை பாஜக கூட்டணி பக்கம் கொண்டு வர நடத்திய முயற்சிகள் யாருக்காக? எதற்காக என்பது தெரியவில்லை. தாம் போட்டியிட்ட இடங்களில் 70 சதவீத வெற்றி பெற்ற பாஜக, ஆட்சி அமைப்பதில் மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் போனது ஏன்?. இதனாலேயே மகாராஷ்டிரா விவகாரத்தில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைவதில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களை அம்மாநில மக்கள் புரிந்து கொண்டு ஒரு கருத்துக்கு வரட்டும் என்பதற்காகவே கமல்நாத் போன்றோர், அவசரம் காட்டாமல் பொறுமையை கடைப்பிடித்தனர். இதே நிலை வரும் நாட்களிலும் நீடிக்குமா என்பது தெரியவில்லை.

கர்நாடகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மெஜாரிட்டிக்கு ஒரு சில இடங்கள் குறைந்தாலும், கூடுதல் இடங்களைப் பிடித்த தனிக்கட்சி என்ற அந்தஸ்து பெற்றது பாஜக . மகாராஷ்டிராவில் இப்போது நடந்தது போன்று எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதித்தார். பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எடியூப்பாவால் முடியாமல் போகவே பதவி விலகினார். அதன் பின்னர் கர்நாடகாவில் ஆட்சி அமைத்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியை முரண்பட்ட கூட்டணி என பாஜக விமர்சித்ததும் வரலாறு. கர்நாடக அரசியலில் முதலில் கற்ற பாடம் மூலம் தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைந்துள்ள மூன்று கட்சிகளின் கூட்டணியை கிண்டலாக விமர்சித்து மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தி, அதன் மூலம் தங்கள் கட்சியின் பன்முகத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் பாஜக முயல்கிறது.

அஜித் பவாருடன் சரத் பவார்
அஜித் பவாருடன் சரத் பவார்

இதனால் சமீபத்திய மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வுகள் மூலம் எழுந்துள்ள முக்கிய கேள்வி இதுதான் :

மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு தொல்லைகள், இடையூறுகளை ஏற்படுத்தியதன் மூலம் அரசியலில் பாஜக சாதித்தது என்ன? சுவைமிகுந்த பழம் என நினைத்து ஒரு மோசமான பழத்தை தின்றது போன்ற கசப்பான அனுபவம் ஒன்றே ஒன்று தான் மிச்சம் என்ற கதையாகி விட்டது இன்றைய அரசியல்.

Intro:Body:

சுவையான பழம் கூட கசந்தது போலான இன்றைய அரசியல் :

தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல்,  அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், சமீபத்திய மகாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளைக் கூறலாம்.

அரசியலிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி எந்த நேரத்திலும் எதிர்பாராத நிகழ்வுகள் எதுவும் நடக்கலாம் என சில நாட்கள் முன்பு தான், மத்திய அமைச்சரான நிதின் கட்கரி திருவாய் மலர்ந்திருந்தார். அது மகாராஷ்டிரா அரசியலில், பதவியேற்ற 4 நாளில் பட்னாவிஸ் அரசு  கவிழ்ந்ததின் மூலம் நிரூபணமாகிவிட்டது. எதிர்பாரா திருப்பமாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்தன. முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும் தேர்வு செய்து, ஒருமித்த முடிவுக்கு கடந்த 22-ந் தேதி இரவு 8 மணிக்கு வந்து விட்டன. ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு எல்லாமே தலைகீழ் மாற்றமாகி, ஒட்டு மொத்த இந்தியாவையே பரபரப்பாக்கி விட்டது. அடுத்தடுத்து என்ன அதிரடி செய்திகள் வரப் போகின்றனவோ? என அனைவரையும் டிவி முன் கட்டிப் போட்டுவிட்டது பாஜகவின் பட்னாவிஸ் முதல்வரான சம்பவம். அந்த ஒரே நாள் நள்ளிரவில், ஆபரேசன் ஆகார்ஸ் என்ற பெயரில் பாஜக மேற்கொண்ட அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால், தேசியவாத காங்கிரசின் சட்டமன்ற குழுத் தலைவரான அஜித் பவார், பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறினார். அக்கட்சியின் 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில், இரவோடு இரவாக குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற நிகழ்வு அரங்கேறி விட்டது. ஆனால் பட்னாவிசை மீண்டும் முதல்வராக்க முடிந்த அஜித் பவாரால், எதிர்பார்த்தபடி தேசியவாத காங்கிரசில் எந்த பிளவும் ஏற்படுத்த முடியவில்லை. பிளவும் ஏற்படவில்லை. இதனால் பட்னாவிஸ் அரசுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதும் சந்தேகமாகி விட்டது.

இந்நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, வழங்கிய அதிரடி தீர்ப்பையடுத்து, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ய, பாஜக நிலைமை பரிதாபமாகிவிட்டது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிப்பது இயலாது என உறுதியானதால்,வேறு வழியின்றி பட்னாவிசும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி பதவியேற்ற 4 நாட்களிலேயே பாஜக பின் வாங்கி, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க வழிவிட்டது. தங்களுக்குள் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி, தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் நிலையான ஆட்சியை தர முடியுமா? என்பது தான் இப்போதைய கேள்வி.

இதற்கு முன்னர் 1996-ல் மத்தியில் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக இருந்த போதும், மெஜாரிட்டிக்கு எதிர்க்கட்சிகளின் தயவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது வாஜ்பாயோ, எதிர்க்கட்சிகளை உடைத்து தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால், அப்படி இந்தப் பதவியே தேவையில்லை என்று கூறிவிட்டதும் நடந்தது. அப்படி கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது.மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 21-ல் நடந்த தேர்தலில், பாஜக கூட்டணியில் 25.6 சத வாக்குகளைப் பெற்று 56 இடங்களில் வென்றது சிவசேனா . பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான இடங்களுக்கும் கூடுதலாகவே பலம் இருந்தும், முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரப்பகிர்வில்  சிவசேனா முரண்டு பிடித்ததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் காங்கிரஸ் முதலில் தயங்கினாலும், ஒரு வழியாக தயவு காட்ட, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - கூட்டணி அரசு ஆட்சியமைந்து, சிவசேனாவுக்கு முதல்வர் பதவியும் கிடைத்துவிட்டது.

இப்போதோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஊழலில் ஊறிப்போன கட்சி என பாஜக விமர்சிக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன் அதே கட்சியின் அஜீத்பவாருடன் கைகோர்த்து, அவருடைய ஆதரவாளர்களையும் கவர, அஜீத் பவாருக்கு துணை முதல்வர் பதவியையும் வழங்கியது. இது போன்றுதான் பதவி, அதிகாரத்திற்காக மணிப்பூர் முதல் கோவா வரை கொள்கை முரண்பாடான கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானது. இன்றைக்கு அஜித் பவாரின் இந்த அரசியல் விளையாட்டும், "நீ எதைக் கொடுத்தாலும், அதை குடிக்கத் தயார்" என்பதையே பிரதிபலிப்பது போல் உள்ளது. சிறந்த சித்தாந்தங்கள், கொள்கைகளை கொண்ட தலைவர்களையும் , தொண்டர்களையும் கொண்ட கட்சி என அறியப்படும் பாஜக, பதவி, அதிகாரத்திற்காக, முதலில் கர்நாடகாவிலும், இப்போது மகாராஷ்டிராவிலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்பது தான் தெரியவில்லை.

 மகாராஷ்டிராவில் இப்போது அமைந்துள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணியை 3 சக்கரங்கள் கொண்ட ஆட்டோ என்றும், அதன் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு திசையில் பயணிப்பதாகவும், முதல்வர் பதவி இழந்த பட்னாவிஸ் ஒரு தீர்க்கதரிசி போல் விமர்சித்துள்ளார். இதனால், இந்த 3 கட்சிகளின் கோமாளித் தனங்களால் எந்த நேரமும் ஆட்சி என்ற ஆட்டோ கவிழும் என்றும் பட்னாவிஸ் கூறியுள்ளார்.பட்னா விஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த போது, பதவிக்காகவும், மெஜாரிட்டிக்காகவும் குதிரை பேரத்தில்  ஈடுபட்டு எம்எல்ஏக்களை இழுப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறினார். ஆனால், முன்னதாக அஜித் பவாரை பாஜக கூட்டணி பக்கம் கொண்டு வர நடத்திய முயற்சிகள் யாருக்காக? எதற்காக என்பது தெரியவில்லை. தாம் போட்டியிட்ட இடங்களில் 70 சதவீத வெற்றி பெற்ற பாஜக, ஆட்சி அமைப்பதில் மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் போனது ஏன்?. இதனாலேயே மகாராஷ்டிரா விவகாரத்தில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைவதில் ஏற்படுத்தப்பட்ட  குழப்பங்களை அம்மாநில மக்கள் புரிந்து கொண்டு ஒரு கருத்துக்கு வரட்டும் என்பதற்காகவே கமல்நாத் போன்றோர், அவசரம் காட்டாமல் பொறுமையை கடைப்பிடித்தனர். இதே நிலை வரும் நாட்களிலும் நீடிக்குமா என்பது தெரியவில்லை. 

கர்நாடகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மெஜாரிட்டிக்கு ஒரு சில இடங்கள் குறைந்தாலும், கூடுதல் இடங்களைப் பிடித்த தனிக்கட்சி என்ற அந்தஸ்து பெற்றது பாஜக . மகாராஷ்டிராவில் இப்போது நடந்தது  போன்று எடியூரப் பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதித்தார். பெரும்பான்மையை உடனே நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எடியூப்பாவால் முடியாமல் போகவே பதவி விலகினார். அதன் பின்னர் கர்நாடகாவில் ஆட்சி அமைத்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியை முரண்பட்ட கூட்டணி என பாஜக விமர்சித்ததும்  வரலாறு. கர்நாடக அரசியலில் முதலில் கற்ற பாடம் மூலம் தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைந்துள்ள மூன்று கட்சிகளின் கூட்டணியை கிண்டலாக விமர்சித்து மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தி, அதன் மூலம் தங்கள் கட்சியின்  பன்முகத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் பாஜக  முயல்கிறது.

இதனால் சமீபத்திய மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வுகள் மூலம் எழுந்துள்ள முக்கிய கேள்வி இதுதான் :

மகாராஷ்டிரா அரசியலில் பல்வேறு தொல்லைகள், இடையூறுகளை ஏற்படுத்தியதன் மூலம் நிதர்ச அரசியலில் பாஜக சாதித்தது என்ன?சுவைமிகுந்த பழம் என நினைத்து ஒரு மோசமான பழத்தை தின்றது போன்ற கசப்பான அனுபவம் ஒன்றே ஒன்று தான் மிச்சம் என்ற கதையாகி விட்டது இன்றைய அரசியல்.

ReplyForward

Conclusion:
Last Updated : Dec 6, 2019, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.