கரோனா தொற்று முடிந்தவுடன் உலகம் ஒரே மாதிரியாக இருக்காது என்றும், அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல், மருத்துவம், கல்வி, பணிசெய்யும் முறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
பாஜக ஏற்பாடு செய்திருந்த வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய அவர், "இந்த நெருக்கடி காலத்தில் தபால்காரர்களின் பங்கு பாராட்டுக்குரியது. அவர்கள்தான் 700 டன் எடையுள்ள மருந்து பொருள்களை மூத்த குடிமகன்களுக்குக் கொண்டுசேர்த்துள்ளனர். சொந்த ஊர் திரும்பியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
நாட்டில் கல்வி, மருத்துவம், பணிச்சூழலின் தன்மையை மாற்றுவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உச்ச நீதிமன்றம்கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. 85 விழுக்காடு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர்.
மின்னனு சாதனங்களை உற்பத்திசெய்யும் மையமாக இந்தியாவை மாற்றுவதே நமது நோக்கம். இதற்காக மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு