நடந்துமுடிந்த தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெற்றுள்ளார்.
இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர் பதவி ஏற்பு விழா நாளை எளிமையான முறையில் அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக, தற்காலிக பந்தல் அமைப்பது, விழாவில் பங்கேற்கவரும் முக்கிய பிரமுகர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. நாளை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்கவுள்ள வெங்கடேசனுக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்துவருகிறார்.