இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி. இந்த கட்சியை ட்விட்டர் பக்கத்தில் 11மில்லியன் நபர்கள் பின்தொடர்ந்து வருவதாக கூறி அக்கட்சியின் தேசிய தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![bjp twitter](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3248664_tw.jpg)
அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பாஜகவிற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 5.14 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் பிரதமர் மோடியை 47.2 மில்லியன் பேரும், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை 106 மில்லியன் பேரும், டொனால்ட் ட்ரம்பை 60.2 மில்லியன் பேரும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை 9.4 மில்லியன் பேரும் பின்தொடர்ந்து வருகின்றனர்.