பிகார் மாநிலத்தில் சசாரம் (Sasaram) பகுதியைச் சேர்ந்த சாக்ஷி, மே 4ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். ஆனால், சிறுமியின் தந்தை வெளியூரில் சிக்கிக் கொண்ட காரணத்தினால், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடியாமல் சோகத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், தனது உறவினருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்தக் குறுந்தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது. சசாரம் ஆய்வாளர் வாட்ஸ்அப் மெசேஜை பார்த்துவிட்டு சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்தார்.
அதன்படி, சிறுமியின் வீட்டுக்கு காவலர்கள் நேரில் சென்று, கேக் வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். புன்னகையுடன் கேக்கை பெற்றுக்கொண்ட சிறுமி , "நன்றி போலீஸ் அங்கிள்.. நான் இதை எதிர்பார்க்கவில்லை. மிக்க நின்றி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி