இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கி அதன் வீரியத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன.
போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்தும், தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர். இருப்பினும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகப்பட்சமாக 52 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
இதனால், மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஆளும் சிவசேனா கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது.
அதன்படி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் உள்ள முக்கியப் பெருநகரங்களான மும்பை, மும்பை பெருநகர மண்டலம், புனே, பிம்ப்ரி சின்சாவத், நாக்பூர் ஆகியவற்றில் அனைத்துப் பணியிடங்களும் வரும் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை, வங்கிகளை தவிர அணைத்து பணியிடங்களும் மூடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19: பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்த விராட், அனுஷ்கா!