ETV Bharat / bharat

'கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் எனத் தொடர் பிரச்னைகள் வருகின்றன': ஹர்ஷ் வர்தன் - கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் என தொடர்ந்து பிரச்னைகள் வருகின்றன:ஹர்ஷ் வர்தன்

தற்போதைய கரோனா சோதனை முதன்மையாக ஆபத்தில் இருக்கும் அல்லது அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும்; மேலும் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விதி தொடர்ந்து திருத்தப்படுகிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பல பிரச்னைகள் வருகின்றது எனவும் அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.

Testing 1.3 billion
Testing 1.3 billion
author img

By

Published : May 28, 2020, 11:11 PM IST

கோவிட்-19க்காக 1.3 பில்லியன் மக்களை பரிசோதிப்பது சாத்தியமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

இந்தியாவில் கரோனா சோதனை பற்றிய நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தற்போதைய சோதனை யுக்தி தேவை அடிப்படையிலானது மற்றும் முதன்மையாக ஆபத்தில் இருக்கும் அல்லது அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதிக்கிறோம். இது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்பத் தொடர்ந்து திருத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

"மேலும் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக பல பேர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், அதிக வெப்பமும் தற்போது சேர்ந்துள்ளது. வெப்பம் அதிக அளவு உள்ளதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வெட்டுக்கிளி பிரச்னையும் அதனோடு சேர்ந்துள்ளது" என வேதனைத் தெரிவித்துள்ளார், மத்திய அமைச்சர் ஹர்த் வர்தன்.

இதையும் படிங்க: 'திருமலை - திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.