ETV Bharat / bharat

தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதி அமைப்புகள் பரப்புகின்றன - இந்திய தூதர் பவன் பாதே - தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதி அமைப்புகள் பரப்புகின்றன

டெல்லி: கரோனா காலக்கட்டத்தை பயன்படுத்தி தவறான தகவல்களை இந்தியாவில் பயங்கரவாதிகள் அமைப்புகள் பரப்பு வருவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது அமர்வில் இந்திய தூதர் பவன் பாதே தெரிவித்துள்ளார்.

ind
nd
author img

By

Published : Sep 26, 2020, 6:43 AM IST

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது அமர்வில் பேசிய இந்திய தூதர் பவன் பாதே, மனித உரிமை சூழ்நிலைகள் மற்றும் நாட்டில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் போலி உள்ளடக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " கரோனா தொற்றால் பெரும் நெருக்கடியில் இந்தியா உள்ளது. வைரஸ் பாதிப்பு குறைக்க அந்தந்த மாநிலங்கள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், ஊரடங்கால் ஏற்படும் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான துயரங்களை பெரிதுப்படுத்துவதில் பயங்கரவாதி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு அவர்களை விலையில் சிக்க முயற்சி செய்கின்றனர். பாதுகாப்புப் படையினரையும் சுகாதாரப் பணியாளர்களையும் குறிவைக்க பயங்கரவாத குழுக்கள் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. வெறுக்கத்தக்க பேச்சுகள், போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "ஐ.நா. பட்டியலிடப்பட்ட சர்வதேச பயங்கரவாத குழுக்கள் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக தொண்டு என்ற பெயரில் நிதி சேகரித்து வருகிறார்கள். கரோனாவுடன் உலகம் சிக்கியுள்ள சமயத்தில், ​​பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாநிலங்களிடையே ஒத்துழைப்பது முக்கியம். அவற்றை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன, உண்மையில்,தொற்று நோய்களின்போது அதிகரித்துள்ளன" எனத் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.