அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் நகரத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழவுள்ளதாக உளவுத் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்ட 30 குழுக்கள் நகரம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டன.
மேலும், கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளவர்களை அந்த இடத்திலிருந்து காலி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகளைத் தவிர மற்ற அனைவரும் அயோத்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து மத்திய, மாநில படைகளைச் சேர்ந்த 300 குழுக்கள் பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் குவிக்கப்படவுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலம் உள்ள ராம் கோட் சாலையை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சட்டம் ஒழுங்குக்கு பங்கம் வருமானால் தகுந்த நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உள் துறை அமைச்சகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அயோத்தியா வழக்கு: அரசியல் கட்சிகளுடன் ஆர்எஸ்எஸ் ஆலோசனை!