அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, சார்க் நாடுகளுக்காக இந்தியாவின் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் குறிப்பிட்ட ஜெய்சங்கர், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசினார்.
மேலும், பயங்கரவாத ஒழிப்புதான் ஒத்துழைப்புக்கான ஒரே தீர்வு என்று பாகிஸ்தான் குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் திட்டவட்டமாக எடுத்து வைத்தார்.
இவர் பேசியபோது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி அவையைவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர், ஜெய்சங்கர் தனது உரையை முடித்த பிறகுதான் உள்ளே வந்தார். அதேபோல், குரேஷியின் உரையை ஜெய்சங்கர் புறக்கணித்துவிட்டார்.
இதையும் படிங்க: 'இந்தியாவுக்கென தனியொரு வழி வேண்டும்' - வெளியுறவுத் துறை அமைச்சர்