இந்தியாவில் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் (TEMA), 1990ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தினர் நாட்டில் தொலைத்தொடர்பு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.
உலகளவில் "மேக் இன் இந்தியா" பிராண்டை மேம்படுத்துவதற்கு, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கொள்கை உரையாடலுக்காக சர்வதேச அமைப்பான CMAIவை ஊக்குவிக்கின்றனர். 74 சர்வதேச அமைப்புகளுடன் 48,500 உறுப்பினர்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ள சி.எம்.ஏ.ஐ இப்போது டெலிகாம் துறை மட்டுமல்லாமல் ஐ.சி.டி, கல்வி, சைபர் பாதுகாப்பு, திறன் மேம்பாடு போன்ற அனைத்து தொடர்புடைய துறைகளில் சிறந்து விளங்குகின்றன.
இந்நிலையில், TEMAஇன் துணைத் தலைவர் ஸ்ரீ சந்தீப் அகர்வால் கூறுகையில், "சர்வதேச எல்லை மற்றும் தரவு தனியுரிமையைப் பாதுகாக்க வேகமாக அரசு பணியாற்றுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே, சீனாவின் 59 செயலிகளை தடை செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் 47 செயலிகள் தடை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. உள்நாட்டு நிறுவனங்கள் விலை, தரம் இரண்டிலும் உறுதி செய்யும் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளை பாராட்டுக்குரியது. எல்லை நாடுகளைச் சேர்ந்த சீன மற்றும் பிற நிறுவனங்களுக்கான தானியங்கி அந்நிய நேரடி முதலீட்டை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை நிலைநிறுத்த உதவுகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும், டெலிகாம் ஆபரேட்டர்கள் உள்பட அனைத்து தனியார் துறை வாங்குதல்களுக்கும் பிபிபி எம்ஐஐ ஆர்டர்கள் பொருந்த வேண்டும் என TEMO வலியுறுத்தியுள்ளது.