தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூன் 8) ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (NIMS) வருகைப் புரிந்தார்.
அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். கரோனா தொற்றால் பல மருத்துவர்களும் பணியாளர்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழிசை அங்கு சென்றதாகத் தெரிகிறத்.
கரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் தமிழிசை, அங்குள்ள மருத்துவப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, 'கரோனா தொற்றை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து, நான் கவலை அடைந்தேன். எனவே, அவர்களை சந்தித்து நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன். இந்தப் போராளிகளுக்கு எனது ஆதரவு தெரிவிப்பதற்காகவே இங்கு நான் வந்தேன்' என்று கூறினார்.