கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து சீனாவுடனான வர்த்தகத்தை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 106 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. தற்போது அடுத்தக்கட்டமாக தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கு சீனாவிடம் இருந்து வாங்கப்படும் உபகரணங்களுக்கு பதிலாக நாட்டின் பாதுகாப்பு கருதி, செல்போன்களை உற்பத்தி செய்வதுபோல் தொலைத்தொடர்பு உபகரண சாதனங்களையும் இந்திய நிறுவனங்களே உற்பத்தி செய்ய இறங்க வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ஷர்மா கூறியிருக்கிறார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சீன நாட்டின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வுப்பெற்ற ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் நிதியமைச்சகம்!