தெலங்கானாவில் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது நாளன்று நடைபெற்ற விவாதத்தி்ல், காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளின் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, சபாநாயகர் போச்சாரம் சீனிவாஸ் ரெட்டி, சட்டப்பேரவை 340இன் கீழ் ஆறு சட்டப்பேரவை உறுப்பனர்களை ஒரு நாள் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்து உரையாற்றிய போது, ஆறு உறுப்பினர்கள், அவரை பேசவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சட்டப்பேரவை விவகார அமைச்சர் வி.பிரசாந்த் ரெட்டி இந்த தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதையடுத்து, சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார்.
அதன்படி காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் மல்லு பட்டி விக்ரமார்க்கா, டி.ஸ்ரீதர் பாபு, கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி, டி ஜாகா ரெட்டி, போதம் வீரைய்யா, தன்சாரி அனசூயா ஆகியோர் சட்டப்பேரவையிலிருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'செழிப்பான குடும்பத்தில் பிறந்த என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லை' - தெலங்கானா முதலமைச்சர்