ETV Bharat / bharat

சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி குவித்த தெலங்கானா ஏசிபி மீது வழக்குப்பதிவு! - மல்கஜ்கிரி துணை ஆணையர் மீது ஊழல் தடுப்பு பணியகம் வழக்குப்பதிவு

ஹைதராபாத்: சட்டவிரோதமாக 70 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ள மல்கஜ்கிரி துணை ஆணையர் மீது ஊழல் தடுப்பு பணியகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

acp
acp
author img

By

Published : Sep 25, 2020, 7:16 AM IST

தெலங்கானாவில் மல்கஜ்கிரியின் துணை ஆணையர் யெல்மகுரி நரசிம்ம ரெட்டி, சட்டவிரோதமாக பல சொத்துக்களை வைத்துள்ளதாக ஊழல் தடுப்பு பணியகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் களத்தில் இறங்கிய ஊழல் தடுப்பு பணியகத்தின் அலுவலர்கள், நரசிம்ம ரெட்டியின் பெயரில் வாரங்கல், ஜங்கான், நல்கொண்டா, யாதத்ரி புவனகிரி, ஜங்கான், கரீம்நகர் மற்றும் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த அதிரடி தேடுதல் வேட்டையில் அனந்தபூரில் 5 ஏக்கர் விவசாய நிலங்கள், மாதபூரின் சைபர் டவர்ஸ் முன் 1,960 சதுர அளவில் நிலங்கள், ஹபீஸ்பேட்டில் ஒரு வணிக கட்டடம், இரண்டு வீடுகள், உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால்,இந்த சொத்துகளின் விவரங்களை ஆய்வு செய்ததில், எதற்கும் சரியான ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, 15 லட்சம் ரொக்க பணம், இரண்டு வங்கி லாக்கர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன தெரியவந்தது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், ஏ.சி.பி தனது சேவையின் போது ஊழல் மற்றும் சந்தேகத்திற்குரிய வழிகளில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த முறையற்ற பணத்தின் மூலம் சொத்துக்களை சட்டவிரோதமாக வாங்கியது தெரியவந்தது. இவர் விரைவில் நாம்பல்லியில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் ஊழல் தடுப்பு பணியகம் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்ற காவலில் எடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.