டெல்லி சென்றுவிட்டு தெலங்கானாவுக்கு வந்த 74 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்றினால் உயிரிழந்தார். டெல்லி சென்று வந்த நாள் முதலே கரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இறந்த பின்புதான் அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதிப்பால் தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... தெலங்கானா விபத்து - உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!