இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் கோவிட்-19 தொற்று உள்ளவர்கள் (6 அடிக்குள்) தங்களை நெருங்கும் போது ஆபத்தை உணர்த்துவதற்காக, “ஆரோக்கிய சேது” என்ற செயலியை மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது. இந்த செயலியின் மூலமாக, கோவிட்-19இன் அபாயத்தைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையின் முன்முயற்சிகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம். பகிர்ந்தும் கொள்ளலாம்.
மக்கள் மத்தியில் ஆரோக்கிய சேது செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி, அதே பெயரில் போலி ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கி மோசடியாளர்கள் நிலைமையைப் பயன்படுத்த தீவிரமாகிவிட்டனர்.
இதே பெயரில் சில போலி செயலிகளும் உலாவுகிறது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இதுபோன்ற போலிகளை தவிர்க்க, ஆரோக்கிய சேது செயலியை அரசின் MyGov.in இணையதளத்தில் இருந்தோ அல்லது ஆன்ட்ராய்டு அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், “ஆன்ட்ராய்டு பயனர்கள் " Google Play Protect / Play Protect " ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு செயலிக்கும் "அறியப்படாத மூலங்களிலிருந்து நிறுவுதல் "("Installation from Unknown Sources") முடக்கப்பட்டிருப்பதை ஆன்ட்ராய்டு பயனர்கள் உறுதி படுத்திக்கொள்ளுங்கள்” என எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: புல்வாமா, ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு!