தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் போராட்டம் 46 நாட்களுக்கும் மேல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.
அரசுப் பேருந்து போக்குவரத்தைத் தனியார் மயமாக்கக் கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சவ்ஹான் அமர்வு, போக்குவரத்து சட்டப்படி, தனியார் மயமாக்குதலுக்கு அரசுக்கு சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என்பதை உணர்வதாக நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் ஊழியர்களுக்கு எதிராக எந்த ஒரு தீர்ப்பையும் அளிக்காமல் இந்த வழக்கிற்கு, இன்னும் இரண்டு வாரத்திற்குள் சுமுகமான தீர்வை ஏற்படுத்த தொழிலாளர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் என்றும்; மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையைத் திரும்ப பெற்றுக் கொண்டு, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி தெலங்கானா போக்குவரத்து கழகத்திடம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் போராட்டத்தை கைவிடுவதாக போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: நடனமாடி போக்குவரத்தை சீர் செய்யும் மாணவி - வைரல் வீடியோ