தெலங்கானா மாநில சட்டப்பேரவையில், 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் டி. ஹரிஷ் ராவ் தாக்கல்செய்தார்.
இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
பொருளாதார மந்தநிலையினால் கடந்த ஆண்டைவிட இந்தாண்டின் மாநில வருவாய் வெகுவாகக் குறையும் எனத் தெரிகிறது. இதனால், 2018-2019ஆம் ஆண்டில் 16.1 விழுக்காடாக இருந்த வருவாய் விகிதம், 2019-20-ஆம் நிதியாண்டில் 6.3 விழுக்காடாகக் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பொருளாதார சரிவின் காரணமாக வரியில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் வேளாண்மையின் வளர்ச்சி விகிதம் 23.7 விழுக்காடாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தெலங்கானாவில் தனிநபர் வருமானம் அதிகமாகவுள்ளது. தெலங்கானாவில் 2019-2020 நிதியாண்டில் தனிநபரின் வருமானம் இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 216 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.
குறிப்பாக, வரும் நிதியாண்டில் ஆறாயிரத்து 225 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தெலங்கானா அரசின் முக்கியமான வாக்குறுதியாகும்.
இதையும் படிங்க: சிங்கப் பெண்களுடன் மோடி கலந்துரையாடல்