ETV Bharat / bharat

ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் சீட்... ரூ.50 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா மாணவிக்கு கிட்டிய வாய்ப்பு! - சுஹார்ஷாவின் கல்வி

ஹைதராபாத்: ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாடப்பிரிவில் பயில தெலங்கானாவைச் சேர்ந்த சுஹார்ஷா பாஸ்கர்லா என்ற மாணவிக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் உதவித்தொகையாகக் கிடைத்துள்ளது.

தெலங்கானா மாணவி
தெலங்கானா மாணவி
author img

By

Published : Jul 25, 2020, 1:50 PM IST

தெலங்கானா மாநிலத்திலுள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், இளங்கலை வனவியல் பிரிவில் இறுதியாண்டு பயிலும் மாணவி, சுஹார்ஷா பாஸ்கர்லா. இவருக்கு அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் வனம் மற்றும் வன உயிரின அறிவியல் முதுகலைப் பாடப்பிரிவில் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்பாடப்பிரிவைப் பயிலும் இரண்டு வருடங்களுக்கு சுஹார்ஷாவிற்கு ஆபர்ன் பல்கலைக்கழகம் உதவித்தொகை வழங்கிவிடும். இதன்படி, ஆபர்ன் பல்கலைக்கழகத்தின் ஆண்டுக் கட்டணமான 15 ஆயிரம் அமெரிக்க டாலரை சுஹார்ஷா செலுத்த தேவையில்லை என்றும், இதுதவிர மாதத்திற்கு 1,500 டாலர் சுஹார்ஷாவிற்கு உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் ஆபர்ன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுஹார்ஷா கூறுகையில், “வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பது எனது கனவு. இந்த இலக்கை நோக்கிச் செல்ல எனது கல்லூரி உதவியுள்ளது. ஊரடங்கிற்கு மத்தியில் பல சவால்களைச் சமாளித்து, மூன்று மாதம் காத்திருந்த பின்னர்தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

ஆபர்ன் பல்கலைக்கழகம் சுஹார்ஷாவின் கல்விக்காக மொத்தமாக 66 ஆயிரம் டாலர் உதவித்தொகையாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாயாகும்.

இதையும் படிங்க: பிரதமர் சிறப்பு உதவித் திட்டம் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.