ETV Bharat / bharat

கரோனா: ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த விவசாயி! - corona awarness

அமெரிக்காவில் பெண் புலி ஒன்றுக்கு கரோனா தொற்று பரவியதால், தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆடுகளுக்கு முகக்கவசங்களை அணிவித்துள்ளார்.

ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த விவசாயி
ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்த விவசாயி
author img

By

Published : Apr 11, 2020, 10:23 AM IST

உலகளவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்த வைரஸால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைத்து வயது சார்ந்தவர்களுக்கும் பரவிவரும் இந்தக் கரோனா வைரஸ் அண்மையில் புலி ஒன்றுக்கும் முதன்முறையாக பரவியது. நியூயார்க் வன உயிரியல் பூங்காவில் உள்ள நடியா என்கிற பெண் புலிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இந்நிலையில், தான் வளர்க்கும் ஆடுகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்வரா ராவ் புதுவிதமான செயலில் ஈடுபட்டுள்ளார். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆடைகள் மூலம் பிரத்யேக முகக்கவசங்களை தயாரித்து தன்னிடம் உள்ள 20 ஆடுகளுக்கும் அணிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கரோனா பாதிப்பு இருப்பதை நான் செய்தித்தாள்களில் படித்து தெரிந்துகொண்டேன். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எனது ஆடுகளுக்கு முகக்கவசங்கள் தயாரிக்க முடிவு செய்தேன். எனது குடும்பம் இந்த ஆடுகளை நம்பித்தான் உள்ளது. அதனால் எனது ஆடுகளை இழக்க நான் விரும்பவில்லை என்பதால எனது ஆடுகளுக்கு முகக்கவசங்கள் அணிவித்துள்ளேன். புற்கள் மேய காட்டிற்கு ஆடுகளைக் கொண்டுச் சென்றபின் அதன் முகத்திலிருந்து நான் முகக்கவசங்களை கழட்டிவிடுவேன்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 16 ஆயிரமாக அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.