தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா கீசரா காவல்நிலை காவலர் சிவ்குமார் என்பவர், தனது பிறந்தநாள் விழாவை ரிசார்ட் ஒன்றில் தனது சக காவலர்களுடன் சில தினங்களுக்கு முன்பு மது அருந்தி கொண்டாடினார். அதுமட்டுமல்லாமல் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாகவும் வைத்துள்ளார்.
அதனையறிந்த உயர் அலுவலர்களை பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர். அந்தப் பரிசோதனையில் சிவ்குமாருக்கும், மற்றொரு காவலரான நவீன் என்பவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ரச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத், காவலர் சிவ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இரண்டு காவலர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆணையர் கரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் தவிர்க்குமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த கரோனா நெறிமுறை: காங்கிரஸ் கூட்டத்தில் தள்ளுமுள்ளு!