ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்தத் தலைவர்! - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

டெல்லி: அனைத்திந்திய காங்கிரசின் முதன்மை உறுப்பினர் குடூர் நாராயண் ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்யவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

குடூர் நாராயண் ரெட்டி
குடூர் நாராயண் ரெட்டி
author img

By

Published : Dec 8, 2020, 7:51 AM IST

தெலங்கானா காங்கிரஸ் (டி.பி.சி.சி.) பொருளாளரும், அனைத்திந்திய காங்கிரசின் முதன்மை உறுப்பினருமான குடூர் நாராயண் ரெட்டி காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் (ஏ.ஐ.சி.சி.) சோனியா காந்திக்கு, குடூர் நாராயண் ரெட்டி எழுதிய ராஜினாமா கடிதத்தில், "1981ஆம் ஆண்டு எனது மாணவர் பருவத்திலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சி எனக்கு வழங்கிய பொறுப்புகளை, கடமைகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளேன்.

அனைத்திந்திய காங்கிரஸ் உறுப்பினர், தெலங்கானா பிரதேஸ் காங்கிரசின் பொருளாளர் என எனது பொறுப்புகளைச் சிறந்த செயல்திறனைக் கொண்டு திறமையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட்டேன். மக்களுக்கும் கட்சிக்கும் சேவைசெய்ய நீங்கள் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நன்றி. நான் காங்கிரசில் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்தது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய குடூர் நாராயண் ரெட்டி, "மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி போன்ற சக்திவாய்ந்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றார்.

மேலும், "காங்கிரசில் எனக்கு ஒதுக்கப்பட்ட பதவிக்கு ஏற்ப நான் பணியாற்றியுள்ளேன், அதற்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அமித் ஷா, ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குநிலை நிலையாக இல்லை. அது குறித்து நான் கவலைப்படுகிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரே இரவுக்குள் ஏலம் விடப்பட்ட கிராம பஞ்சாயத்து பதவிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.