தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் சௌட்டாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிரண் என்பவர் காவலராக திரியாணி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார்.
கோமரம் பீம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த கிரண், தன்னிடமிருந்த துப்பாக்கியைத் தவறுதலாக இயக்கியதில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
அந்த விபத்தில் அவர் தலையில் தோட்ட பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக காவலர் ஒருவர் பெல்லம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்தத் துப்பாக்கிச் சுடும் சத்தத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது அதிதீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சிவ சேனா துணைத் தலைவர் வண்டி மீது துப்பாக்கிச்சூடு