தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி ராமா ராவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டின் உள்புறத்தைப் படம்பிடிக்க சட்டவிரோதமாக ட்ரோன் பயன்படுத்திய குற்றத்திற்காக, காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டியை ஹைதராபாத் காவல் துறையினர், கடந்த மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், 14 நாள்கள் காவலில் விசாரணைக்கு எடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று, தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பிணை வழங்கியும், இவ்வழக்கின் விசாரணைக்கு காவல் துறையினருக்கு எப்போதும் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனாவால் ஒரு மாதம் போராட்டங்கள் ரத்து'