கரோனா நச்சு வைரஸ் கிருமியின் தாக்கம் நாடு முழுக்க தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு தெலங்கானாவில் 77 பேரும், ஆந்திராவில் 87 பேரும் தமிழ்நாட்டில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் இன்று மாலை, ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது கரோனா பரவல் கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எட்டாலா ராஜேந்தர் மற்றும் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.