ETV Bharat / bharat

”15 ஆண்டுகள் ஆட்சி செய்தும் வரவு-செலவு தெரியவில்லை” - நிதீஷ் குமாரைத் தாக்கும் தேஜஸ்வி யாதவ்! - வரவு செலவு தெரியாதவர் நிதீஷ் குமார்

பிகாரில் 15 ஆண்டு காலம் ஆட்சி செய்தும் மாநிலத்தின் வரவு செலவு திட்டத்தை முறையாக கையாளத் தெரியாதவர் நிதிஷ் குமார் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.

Tejashwi Yadav slams Yogi, says unemployment, poverty matter for Bihar polls

author img

By

Published : Oct 22, 2020, 6:46 PM IST

பாட்னா: பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ளது. கட்சிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், ”எந்த மாநிலத்திலிருந்து, யார் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. பிகார் தேர்தலில் வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் தான் பிரதான இடத்தை பிடிக்கும்.

பிகார் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கான முகாந்திரங்கள் இல்லை. அதனால், எவ்வித தேர்தல் வாக்குறுதிகளை அளித்தாலும் அவை பயனற்றதாகவே அமையும். நிதியமைச்சர், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது ஒருபுறம் இருக்கட்டும்... மக்களுக்காக அறிவித்த பொருளாதார சிறப்பு சலுகைகளின் நிலை என்ன?

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 15 ஆண்டுகள் ஆட்சி செய்தும் அவருக்கு மாநில வரவு செலவு திட்டத்தை முறையாக கையாளத் தெரியவில்லை. பிகாரின் பட்ஜெட் இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 761 கோடி ரூபாய். இதனை முறையாக கையாளத் தெரியாத அவர், மொத்த நிதியிலிருந்து 40 விழுக்காட்டினை பயன்படுத்தாமல் திருப்பியளிக்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களைப் போல சாதிரீதியான கட்டமைப்பை வழுவாக்கவும், ஓட்டு அரசியலுக்காகவும் நிதியை செலவழிக்காமல் மக்களின் நலனுக்காக செலவழிப்போம். பயன்படுத்தப்படும் அனைத்து நிதியையும் வெளிப்படையாக செலவழிப்போம். ஊழல் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்றுவோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.