ரயில்வே துறையின் இந்த அறிவிப்பிற்கு பல ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எதிர்ப்புகள் எதனையும் பொருட்படுத்தாது டெல்லி-லக்னோ ரயிலைத் தனியாருக்கு ஒப்படைக்க ரயில்வே துறை முன் வந்துள்ளது.
டெல்லி-லக்னோ எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏல நடைமுறைக்குப் பின்னர் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதேபோல், 500 கி.மீ தூரத்திற்குள் இருக்கும் ரயில்வே பாதையும் தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இது குறித்து ரயில்வே துறை, ‘அடுத்த 100 நாட்களுக்குள் ரயில்வே துறை இரண்டு ரயில்களைத் தனியார் துறையிடம் ஒப்படைத்து, குறைந்தபட்சம் ஒரு ரயிலையாவது இயக்கும்’ எனக் கூறியுள்ளது.