ETV Bharat / bharat

பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சாலையில் பிச்சை எடுக்கும் அவலம்!

பூரி: ஜெகன்நாத் கோயில் அருகில் சரளமாக ஆங்கிலம் பேசும் மூதாட்டி ஒருவர், சாலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

author img

By

Published : Mar 3, 2020, 3:08 PM IST

begging
begging

ஒடிசா மாநிலம், பூரி பகுதியில் பகவான் ஜெகன்நாத் கோயில் உள்ளது. இதன் அருகிலுள்ள படதந்தாவில் வயதான மூதாட்டி ஒருவர், பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த மக்கள் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அந்த மூதாட்டி, சரளமாக ஆங்கிலத்தில் உரையாடியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரிக்கையில், அந்த மூதாட்டியின் பெயர் லட்சுமி பிரியா என்பதும்; இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் பாடம் கற்பித்த ஆசிரியர் என்பதும் தெரிய வந்தது. பூரியில் மட்டுமல்ல, குஜராத் மற்றும் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவிலும் இம்மூதாட்டி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து விசாரிக்கையில், மூதாட்டியின் வளர்ப்பு மகன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்றுள்ளார். அதிலிருந்து மூதாட்டியின் மனம் சமநிலையை இழந்து சாலையில் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.

ஆசிரியராக பணியாற்றியவர் சாலையில் பிச்சை எடுக்கும் அவலம்

இதே பகுதியில், கடந்த மாதம் சாலையில் பிச்சை எடுத்துக்கொண்டிந்தவர் புகார் மனுவை ஆங்கிலத்தில் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இளைஞர் உயிரிழப்பு - தென்பெண்னை ஆற்று பாலத்தில் சாலை மறியல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.