புதுச்சேரியில் நடத்த 30 மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான வழக்குகளை இனிமேல் மோட்டார் வாகன சட்ட ஆணையம் மூலம்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்காக ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இத்த உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எதிரே நடைபெற்ற இத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் வழக்கறிஞர்களும், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் வழக்கறிஞர்களுக்கு பங்கு இல்லாத ஒரு ஆணையத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் வழக்கறிஞர் தொழில் நசுக்கப்படும் என்று தெரிவித்தனர்.