தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில், மலைவாழ் மக்கள் நலத்துறை சார்பில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடன் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஐஐடி, என்ஐடி, சிவில் சர்வீஸ் போன்ற துறைகளில் மலைவாழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
விரைவில் மலைவாழ் மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாள் தங்கி அவர்களின் சம்பிரதாய கலாசாரங்களை தெரிந்துகொள்வேன் என்று கூறிய தமிழிசை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கோய, லம்பாடி மலைவாழ் மக்களுடன் கைகளை கோர்த்து உற்சாகமாக நடனம் ஆடினார்.
இதையும் படிங்க: தெலங்கானாவிலும் என்னை சகோதரி என்று அழைக்கிறார்கள்- தமிழிசை நெகிழ்ச்சி