ETV Bharat / bharat

உலக கர்லாக்கட்டை தினம் - மூன்று இளைஞர்கள் சாதனை - புதுச்சேரியில் கரலாக்கட்டை விழா

புதுச்சேரி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கர்லாக் கட்டையின் மூன்று பிரிவுகளில் இளைஞர்கள் உலக சாதனைப் படைத்தனர்.

author img

By

Published : Dec 13, 2019, 12:08 AM IST

புதுச்சேரி புராணம் குப்பத்தில் செயல்பட்டு வரும் சிலம்பம் சத்திரிய பயிற்சிப் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கர்லாக்கட்டை விளையாட்டை, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்த கர்லாக்கட்டை விளையாட்டை இன்றைய சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் கற்றுக்கொள்ளவும் முயன்று வருகின்றனர்.

உலக கர்லாக்கட்டை தினம்

இதற்காக உலக சாதனை முயற்சி திட்டமிடப்பட்டு, அதில் இப்பயிற்சி பள்ளியைச் சேர்ந்தோர் கடந்த நான்கு மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உலக கர்லாக்கட்டை தினமான டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோன்று இந்த நாளில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 'அசிஸ்ட் வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு' சார்பில் சாதனை முயற்சி இன்று நடைபெற்றது.

அசிஸ்ட் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பின் செயலாளர் ராஜேந்திரன் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் செந்தில் கண்ணன் 12 கிலோ எடையுள்ள 5 அடி உயரம் கொண்ட மாஞ்சா கர்லாக்கட்டையை 17 நிமிடம் 23 விநாடிகளில், 603 முறை சுற்றி உலக சாதனைப் படைத்தார். மாணவி வித்தியா கதாயுத சுற்றி மூலம் அரை மணிநேரத்தில் 925 முறை சுற்றி, சாதனைப் படைத்தார் .

பார்த்திபன் மேல் வராக சுற்றுப் பிரிவில் அரை மணி நேரத்தில் 1, 073 சுற்று சுற்றி, சாதனைப் படைத்தார்.

இதையும் படிங்க: 'புலி நடமாட்டம்?' - நாகர்கோவிலில் பரபரப்பு!

Intro:புதுச்சேரியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கரலாக்கட்டை மூன்று பிரிவுகளில் உலக கரலாக்கட்டை தினத்தில் உலக சாதனை படைத்தனர்

Body:புதுச்சேரி புராணம் குப்பத்தில் செயல்பட்டு வரும் ஜோதி சிலம்பம் சத்திரிய பயிற்சி பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கரலாக்கட்டை விளையாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது கரலாக்கட்டை விளையாட்டை இன்றைய சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

இதற்காக உலக சாதனை முயற்சி திட்டமிட்டு கடந்த நான்கு மாதங்களாக தொடர் பயிற்சி பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர் இதற்கிடையே உலக கரலாக்கட்டை தினமான டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாளில் இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது இதற்காக அசிஸ்ட் வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு சார்பில் சாதனை முயற்சி இன்று நடைபெற்றது அசிஸ்ட் வேர்ல்டு புக் ரெக்கார்டு கண்காணித்தது அதன் செயலாளர் ராஜேந்திரன் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் செந்தில் கண்ணன் 12 கிலோ எடை உள்ள 5 அடி உயரம் கொண்ட மாஞ்சா கரலாக்கட்டை மூலம் 17 நிமிடம் 23 விநாடிகளில் 603 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்
மாணவி வித்தியா கதாயுத சுற்றி மூலம் அரைமணிநேரத்தில் 925 சூப்பர் செய்து சாதனை படைத்தார் மாணவர் பார்த்திபன் மேல் வராக சுற்று பிரிவில் அரை மணி நேரத்தில் 1073 சுற்று சுற்றி சாதனை படைத்தார் கரலாக்கட்டை இவ்விளையாட்டில் மூன்று உலக சாதனை முயற்சி ஈடுபட்டனர் முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

Conclusion:புதுச்சேரியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கரலாக்கட்டை மூன்று பிரிவுகளில் உலக கரலாக்கட்டை தினத்தில் உலக சாதனை படைத்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.