முல்லைப் பெரியாறு அணை கடந்த 1800ஆம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானத்திற்குள்பட்ட (இப்போது கேரளா) பகுதியில் கட்டப்பட்டது. 1886ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்கு கீழ் இருந்த மெட்ராஸ் பிரசிடென்சிக்கு 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இது குறித்த போடப்பட்ட ஒப்பந்தத்தில், நீர்ப்பாசன திட்டங்களை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு முழு உரிமை வழங்கப்பட்டிருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு 1970-களில், தமிழ்நாடு, கேரள அரசுகள் இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், நிலம், தண்ணீர், அணையில் நீர் மின் திட்டத்தை மேற்கொள்ளும் அதிகாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுக்கே உரிமை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக, கேரள அரசுக்கு வாடகை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அணை பாதுகாப்பாக இல்லை, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்படுமாயின் அது கேரள மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என கேரள அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் தொடர் மாற்று கருத்தை கொண்டிருந்தது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்து அதன் பராமரிப்பு தொடர்பாக கண்காணிக்க உச்ச நீதிமன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தது. இக்குழு மற்றொரு துணைக்குழுவை அமைத்து ஆலோசனைகளை பெற்றுவந்தது. இக்குழுவில், இருமாநில பிரதிநிதகளும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், துணை குழு அமைத்தது சட்ட விரோதமானது என கேரளாவை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு, கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு துணைக் குழுவை கலைக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில், "துணைக் குழு கவனமாக செயல்பட்டுவருகிறது. துணைக் குழுவின் கருத்தை ஆய்வுக்குள்படுத்தி இறுதியான முடிவை கண்காணிப்பு குழுவே எடுக்கிறது.
அணையை பழமையானது என மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆனால், அணை பாதுகாப்பாக உள்ளது. கிராவிட்டி அணை உள்ளிட்ட பழமையான அணைகள் பாதுகாப்பாக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.