ETV Bharat / bharat

மத்திய வேளாண் அமைச்சகத்தில் பேச்சுவார்த்தை - பஞ்சாப் விவசாய சங்கங்கள் வெளிநடப்பு!

author img

By

Published : Oct 14, 2020, 11:02 PM IST

டெல்லி: மத்திய வேளாண் அமைச்சகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஞ்சாப் விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தை கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Farmers bill protest
Farmers bill protest

மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பஞ்சாப் மாநில விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் அழைப்பு விடுத்தார். அதனையேற்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றனர்.

பின்னர் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லாத விவசாய சங்க பிரதிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள், "இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

விவசாயிகள் பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அத்துடன் வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் எங்கள் பேச்சை கேக்க தயாராக இல்லை. மசோதாக்கள் நிறைவேற்றத்திற்கு முன் விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.