உலகப் புகழ்பெற்ற காதலர்களின் கல்லறைகள் நிறுவப்பட்ட 300 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது. களிமண்ணின் அடர்த்தியான அடுக்கைப் பயன்படுத்தி, அதைத் தொடர்ந்து நீரைக் கொண்டு கழுவும் முறையை களிமண் பொதி தூய்மைப்படுத்தல் முறை எனலாம்.
களிமண் பொதி என்பது பாரம்பரியமாக பழங்காலத்தில் இருந்து தூய்மைப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும். தாஜ்மஹால் ஒரு களிமண் பொதி தூய்மைப்படுத்தல் வழியே இதுவரை ஐந்து முறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்லறைகளின் பிரதிகள் அதுபோல ஒருபோதும் சுத்தம் செய்யப்பட்டதில்லை.
அடுத்ததாக கல்லறைகளுக்கு அப்பால், மஹாலின் சுவர்கள், மேலடுக்கு தளங்களில் உள்ள சரவிளக்கை, புளிக்கரைத்த நீர் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ) மேற்கொண்டதாக, அரசு தரப்பின் அறிக்கை மூலமாக அறிய முடிகிறது.
முகலாய பேரரசர் ஷாஜகான் அவரது காதல் மனைவி மும்தாஜ் மஹால் ஆகியோரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் உண்மையான கல்லறைகளுக்கு கீழே ஒரு அறை உள்ளன. அசல் தாஜ்மஹால் கல்லறைகள் ஷாஜகான் நினைவு நாளையொட்டி ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டுமே பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் தாஜ்மஹாலின் பின்னால் ஏரியாக குறுகிப் போயிருந்த யமுனை ஆற்றை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகையை முன்னிட்டு தூய்மை செய்ய, 17 மில்லியன் லிட்டர் நீரை பயன்படுத்தி உள்ளனர் என்பது அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு