தெலங்கானா ஆதிலாபாத் மாவட்டத்தில் மாரெம்மா கோயிலில் வால் இல்லா எலிகள் உள்ளன. இவை பொதுவாக கிழக்கு ஐரோப்பாவில் காணப்படுபவை. இந்த கோயிலின் மேலாண்மை பல உயிரினங்களை வளர்க்கத் தொடங்கி இந்த அரியவகை வால் இல்லாத எலிகளை நன்கு கவனித்து வளர்க்கின்றது. இந்த எலிகள் முற்றிலும் சைவ உணவு உண்ணக்கூடியவை.
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த எலிகள் வழக்கமான எலிகளைவிட வலிமையானவை. கோயில் நிர்வாகம் இவைகள் வாழ ஒரு சிறப்பு கூண்டு அமைத்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் இவைகளை பார்த்து செல்கின்றனர்.
தற்போது எட்டு வாலி இல்லாத எலிகள் தங்களிடம் உள்ளதாகவும், இந்த எலிகளால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கோயில் நிர்வாகம் கூறுகிறது.