கடந்த பிப்ரவரி மாத இறுதியில் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் பலர் உயிரிழந்த நிலையில், உளவுத்துறை உயர் அலுவலர் அங்கித் சர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது மரணத்தில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் ஹுசைனுக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி காவல்துறை வழக்கப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் அவர் மீது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை, உபா சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தாஹிர் ஹுசைன் பிணை கேட்டுள்ள நிலையில், அவரின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி டெல்லி கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் கூகுள் நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்று தெரியுமா?