கடந்த ஒரு மாத காலமாக லடாக் எல்லை பகுதியில் இந்தியா, சீனா வீரர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டன. இதனிடையே இந்தியா சீனா எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவப் படைகளை குவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக இந்த எல்லை பிரச்னை தொடர்பாக சமரசம் செய்ய அமெரிக்கா முன் வந்த நிலையில், மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை என இந்திய, சீன அரசுகள் தெரிவித்தன.
இந்த நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய எல்லைப் பகுதியான சுஷூல் மோல்டோவில் நாளை இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.