ETV Bharat / bharat

தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவருக்குச் சம்மன் ? - மவுலானா சாத் கந்தால்வி அமலாக்கத் துறை

டெல்லி: ஊரடங்கை மீறி மத மாநாடு நடத்திய தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப் பதிந்துள்ள அமலாக்கத்துறை விரைவில் அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tabiligi
tabiligi
author img

By

Published : Apr 17, 2020, 11:50 PM IST

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை மீறி, தப்லீக் ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பு கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் சர்வதேச மத மாநாடு ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா பாதிப்பு உறுதியான சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தீவிரமடைந்த கரோனா பாதிப்புக்கு இந்த மாநாடும் ஒரு பிரதான காரணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநாட்டை நடத்திய தப்லீக் ஜமாத் அமைப்பு, அதன் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது டெல்லி காவல் துறை அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால், மவுலானா சாத் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை எந்நேரமும் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு அலுவலர் ஒருவரிடம் கேட்டபொழுது, தப்லீக் ஜமாத் அமைப்பு, அதன் தலைவர்களின் பணப் பரிவர்த்தனை குறித்து பல்வேறு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக வங்கிகளிலிருந்து உரிய ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பின்னர் பணமோசடி சட்டத்தின் கீழ், அவர்கள் மீது கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது" என்றார்.

இதனிடையே, வருமான வரித் துறையினர் மவுலா சாத் உட்பட ஒன்பது பேரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால் இதுவரை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி வருமான வரித் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபொழுது, "உள்ளூர், வெளிநாடுகளிலிருந்து தப்லீக் ஜமாத் அமைப்பு பெற்ற நன்கொடைகள் குறித்து வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் FEMA சட்ட விதிகளுக்கு முரணாக அமைந்தால், அது வரி ஏய்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும்" என்றார்.

மவுலானா சாத்துடன் தொடர்புடைய ஒருவர் ஈடிவி பாரத்துடன் பேசுகையில், " அவர் தனியார் ஆய்வுக்கூடத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு நோய்ப் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது" எனக் கூறினார்.

இதையும் படிங்க : கோவிட்-19: காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடவடிக்கைகள் சிறப்பு; ராகுல் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.