ETV Bharat / bharat

அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த சியாமா பிரசாத் முகர்ஜி! - சியாமா பிரசாத் முகர்ஜி

கொல்கத்தா: தொடக்க காலத்தில் ஆதரவாக இருந்தபோதிலும், பிற்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் 370க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி.

சியாமா பிரசாத் முகர்ஜி
சியாமா பிரசாத் முகர்ஜி
author img

By

Published : Aug 4, 2020, 8:15 PM IST

அரசியலமைப்பு சட்டம், 370 நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அம்பேத்கர், சர்தார் பட்டேல், சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் கனவு நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர்கள் ராம் மாதவ், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இந்நாளை சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தனர். அரசியலமைப்பு பிரிவு 370 சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த முகர்ஜி, ஒரே நாட்டில் இரு சட்ட அமைப்பு இருக்கக் கூடாது என தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டம் 370க்கு எதிராக அனுமதியின்றி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீருக்கு, கடந்த 1953ஆம் ஆண்டு, மே 11 ஆம் தேதி முகர்ஜி செல்கிறார்.

பின்னர், கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஜூன் 23ஆம் தேதி, சிறையில் சர்ச்சைக்குரிய விதத்தில் உயிரிழந்தார். அரசியலமைப்பு சட்டம் 370க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை நசுக்கும் விதமாக முகர்ஜி கொல்லப்பட்டுள்ளார் என, பாஜக பல காலமாக தெரிவித்துவருகிறது.

நேரு அமைச்சரவையில் இருக்கும்போதே, அச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் முகர்ஜி. சட்டத்திற்கு எதிராக சொந்த அரசையே ஏன் எதிர்க்க வேண்டும் என கேள்வி எழுகிறது. இதுகுறித்து வரலாற்றாசிரியர் உதயன் பந்தோபாத்யாய் கூறுகையில், "தொடக்கத்தில், அரசியலமைப்பு சட்டம் 370க்கு ஆதரவாகவே முகர்ஜி இருந்துள்ளார்.

அதற்கு எதிராக கருத்து தெரிவித்ததில்லை. பால்ராஜ் மாதக் என்பவரின் வழிகாட்டுதலை தொடர்ந்து, இவ்விவகாரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார். இவரின் மரணம் அரசியலமைப்பு சட்டம் 370க்கு எதிரான போராட்டத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது" என்றார்.

இதையும் படிங்க: ரக்ஷா பந்தனில் தங்கையை பார்க்க வந்த நக்சல் அண்ணன்...! சகோதரியின் சொல்லுக்காக காவல்துறையில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.