ETV Bharat / bharat

இந்தியாவின் சுக்ராயன் திட்டத்தில் இணைகிறது ஸ்வீடன்

ஸ்வீடனின் விண்வெளி இயற்பியல் நிறுவனம் (ஐஆர்எஃப்), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன்(இஸ்ரோ) இணைந்து, தனது இரண்டாவது முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் கிளாஸ் மோலின் தெரிவித்தார்.

author img

By

Published : Nov 26, 2020, 10:47 AM IST

சுக்ராயன் திட்டம்
சுக்ராயன் திட்டம்

பெங்களூரு: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெள்ளி கிரகத்தின் ஆராய்ச்சிக்கு, சுக்ராயன் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இதற்காக சுக்ராயன் செயற்கை கோள் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், விண்ணில் ஏவப்பட உள்ளது. இத்துடன் ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து பல்வேறு கருவிகளை, பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக சுக்ராயன் கோளுடன் அனுப்புகின்றன.

இதுகுறித்து, ஸ்வீடனின் இந்தியாவுக்கான தூதர் கிளாஸ் மோலின், இந்த திட்டத்தில் ஸ்வீடனின் விண்வெளி இயற்பியல் நிறுவனத்தின் (ஐஆர்எஃப்) தனது வி.என்.ஏ.,யை பொருத்தி அனுப்பி இருக்கிறது. இது வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு, வெளிப்பரப்பை ஆய்வு செய்யும். இந்த கருவி, சூரியனிலிருந்து வெளிப்படும் அணுப்பொருட்கள் வெள்ளி கிரகத்தின் வளி மற்றும் புற மண்டலங்களில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கு உதவும் என்றார்.

ஐ.ஆர்.எஃப் மற்றும் இஸ்ரோ இடையேயான முதல் கூட்டு திட்டமாக "சாரா" சோதனை இருந்தது. சாரா(SARA -Sub-keV Atom Reflecting Analyzer) கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் சந்திரனை ஆராய அனுப்பட்டப்பட இந்திய விண்கலமான சந்திரயான் -1 இல் ஏவப்பட்டது.

பொதுவாக விண்வெளித்துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பில், ஐஆர்எப் நிறுவனம், விண்வெளி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நிறைய வழங்க முடியும் என, மோலின் தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரபஞ்சம், பிற கிரகங்களை ஆராய்வதற்கும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் இந்தியாவுக்கு தெளிவான நோக்கம் உள்ளது.

இது, விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பெரிய அளவிலான ஆர் & டி முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்ட தூதர், இந்திய விண்வெளி உள்கட்டமைப்பைப் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த, இந்தியா சமீபத்தில் தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்தை (IN-SPACe) உருவாக்கியுள்ளது.

இந்த வகையிலான சீர்திருத்த நடவடிக்கைகள், விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்களிப்பை முழு அளவில் அதிகரிக்கும்.

"விண்வெளி சந்தையை, வர்த்தக வீரர்களின் பங்கேற்புக்காக இந்தியா திறந்து வருவதால், செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்ட 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட இறக்குமதி - ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது எதிர்காலத்தை உற்சாகப்படுத்துவதாய் அமையும்.

வரும் ஆண்டுகளில் இஸ்ரோ முக்கிய வாடிக்கையாளராக இருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது முக்கியம், ஆனால் சந்தை வளர்ச்சி அதிவேகமாக இருக்கக்கூடும் "என்று மோலின் கூறினார்.

இஸ்ரோ அதிகாரிகளின் கூற்றுப்படி, "இந்திய விண்வெளி நிறுவனம், 20 விண்வெளி அடிப்படையிலான சோதனை திட்டங்களை பட்டியலிட்டுள்ளது. அதன் முன்மொழியப்பட்ட வீனஸ் பணிக்காக நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கிரகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

இதில் ரஷ்யா, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியின் "கூட்டு பங்களிப்புகள்" அடங்கும்.

இஸ்ரோ ஜூன் 2023 இல், வெள்ளிக்கு செயற்கைகோள் அனுப்ப திட்டமிட்டிருவந்தது. ஆனால் கரோனா தொற்று நோய் சூழ்நிலையிலிருந்து ஏற்படும் தாமதங்கள் காரணமாக, இந்த பணிகளுக்கான காலக்கெடுவை நாங்கள் தற்போது மதிப்பாய்வு செய்கிறோம். இது 2024 அல்லது 2026 இல் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறந்த காவல் நிலையமாக சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.